Monday, December 28, 2020

 அன்னையர் தினா நல்வாழ்த்துக்கள் 🎉

Mother's day Quotes in Tamil - Let's Make the Unforgettable Year for our Mom by Dedicating the Kavithai in Tamil - Mothers day Wishes in Tamil.

அம்மா கவிதை

  • Amma kavithai Facebook
  • Amma Kavithai SMS
  • Amma Kavithai in Tamil
  • Mothers day kavithai in tamil

Amma kavithai

Amma kavithai


அம்மா கவிதைகள்

அன்னையர் தினம் கவிதைகள் 2020

👇👇👇👇👇


காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும்
மார்பிலும் சுமப்பவள்
தாய்மட்டுமே
அவளை என்றும்
மனதில் சுமப்போம்


ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறையில்லை
அம்மா சமயலறை


இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
தன் அருகில்
வைத்து அனைத்து
கொள்கிறது தாய்மை


வயது
வித்தியாசம்
பார்ப்பதில்லை
அம்மாவின்
கொஞ்சலில்
மட்டும்
இன்னும் குழந்தையாக


அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது


வலி நிறைந்தது
என்பதற்காக
யாரும் விட்டுவிடுவதில்லை
தாய்மை ❤


அன்புகலந்த
அக்கறையோடு சமைப்பதால்
தான் எப்போதும்
அம்மாவின் சமையலில்
சுவை அதிகம்


நான் முதல்முறை
பார்த்த அழகிய
பெண்ணின் முக தரிசனம்
அம்மா


இன்று என்னை
இவ்வுலகுக்கு
அறிமுகம் செய்த
என் அன்பு அம்மாவுக்கு
ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்


நான் உன்னுடன்
இருக்கும் பொழுது
என் பிரச்சனை
எப்போதும் மறந்து
விடுகிறேன் செல்லமே
(அம்மா)


எதுவும்
அறியா புரியா வயதில்
எந்த சுமைகளும்
கவலைகளுமின்றி
அன்னையின் கரங்களில்
தவழும் காலம் சொர்க்கமே


உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை


கடல் நீரை
கடன் வாங்கி
கண்கொண்டு அழுதாலும்
நான் சொல்லும்
நன்றிக்கு போதாதம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள்


ஒவ்வொரு நாளும்
கவலை படுவாள்
ஆனால் ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை பட மாட்டாள்
(அம்மா)


ஆழ்ந்த உறக்கத்தின்
அஸ்திவாரம்
அம்மாவின் தாலாட்டு


ஆயிரம் உணவுகள்
வித விதமாக சாப்பிட்டாலும்
அன்னை சமைத்த
உணவுக்கு ஈடாகாது


உலகின் நிகழ்வுகளையும்
அழகினையும் எடுத்து
கூறும் முதல்
குருவாக இருப்பவர்
அம்மா மட்டுமே


ஆயிரம் உறவுகள்
உன் மீது அன்பாக
இருந்தாலும்
அன்னையின் அன்புக்கும்
அவள் அரவணைப்பிற்கும்
எதுவும் ஈடாகாது


தாய் மடியைக்
காட்டிலும்
ஒரு சிறந்த தலையணை
இந்த உலகில்
வேறெதுவும் இல்லை


அம்மா ❤
இந்த நேரத்திலும்
தன்னை பற்றி
கவலைகொள்ளாமல்
நமது ஆரோக்கியத்தில்
அக்கறை கொள்ளும்
அந்த உணர்வு
பாசம் தான்
தாய்மை


உன்னை அணைத்து
பிடிக்கும் போதெல்லாம்
உணர்கிறேன் உலகம்
என் கையில் என்று


எங்க போறீங்க இதோ உங்களுக்காக

 

Life Quotes in Tamil

  • Life Quotes in Tamil language
  • Tamil Quotes about life

தமிழ் லைப் Quotes


பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து
சில காயங்களுக்கு பிரிவு மருந்து
எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து
அமைதி...


இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்


அடுத்தவர்களை பாராட்டும்
போது அவர்களின் மனமும்
குளிரும் நம் மனதிலுள்ள
பொறாமை குணமும் அழியும்


சபதங்களும்
சவால்களும் காற்றில் பறக்கும்
வார்த்தைகளாக
இருக்க கூடாது


ஓலை குடிசையில்
பிறந்தான் மகன்
கோடீஸ்வரன்
என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தந்தை


போராடி வாழ்வதற்கு வாழ்க்கை
ஒன்றும் போர்க்களமல்ல அது
பூ வனம் ....
ரசித்து வாழ்வோம்....


அரசியலை போல்
தான் வாழ்க்கையும்
பல எதிர்பார்ப்புகளை
கொடுத்து ஏமாற்றுவதில்...


மொத்த பிடிவாதத்தையும்
உடைக்கும் வலிமை
பிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு...


அழ நினைத்தால் ஆசைதீர
அழுதுவிடு கண்ணீரின் முடிவில்
சுமைகளும் கரையுமென்றால்...


சகித்துக்கொண்டு வாழ்வதல்ல
வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை...


அடிக்கடி கண்ணீர் விட்டால்
உன் நியாயமான கண்ணீருக்கும் மதிப்பிருக்காது...


கடந்து போன நாட்களில்
உன் துன்பத்திற்கான காரணத்தை பட்டியலிடு
இனி கடக்கபோகும் நாட்களில்
அவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்...


காத்திருக்கும் பொறுமை
நமக்கிருந்தாலும்
காலத்துக்கு இல்லை...


மனமும் கண்ணாடியைபோல்தான்
உடையும்வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை...


இளமையில் உன் சேமிப்பு மட்டுமே
முதுமையில் உனக்கு கைகொடுக்கும்
அடுத்தவர் கையை நம்பி வாழும்
வாழ்க்கை நரகம்...


நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில்
நம் தவறுகளை
நாம் உணரபோவதில்லை...


குறைகள் இருப்பது இயல்பு அதை
மதிக்கொண்டு ஜெயிப்பதுதான் மதிப்பு
( கீதை)


மனம் விசித்திரமானது கிடைத்ததை
நினைத்து நிறைவடையாது கிடைக்காததை
நினைத்து தவிக்கும்...


இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்...


அம்பினால்
பட்ட காயம் ஆறும்
அன்பினால்
பட்டகாயம் ஆறாது


தலையெழுத்தை மாற்றும் திறமை யாருக்கும் இல்லை
எது நடக்குமோ அது நடந்தே ஆகும்...


யாருக்காகவும் காத்திருக்காதே
நீ காத்திருப்பதால்
உன் ஆயுள் அதிகரிக்கபோவதில்லை...


இதயத்தில் குறையிருந்தால்
சரிசெய்ய பல வைத்தியர்கள்
உன் மனக்குறைக்கு
நீ மட்டுமே வைத்தியர்...


வானவில் வாழ்க்கையில்
மின்னலை போல்
வந்து போகும் கனவுகள்


கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும்
வைரக்கல் மங்கி விடுவதில்லை...


எண்ணங்கள் அழகானால்
வாழ்க்கையும் அழகாகும்...


இருப்பவருக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம்
என்ற குழப்பம் இல்லாதவர்களுக்கு
ஒரு விளக்காவது ஏற்றமுடியுமா என்ற கவலை...


நம் பயம் எதிரிக்கு தைரியம்
நம் அமைதி அவனுக்கு குழப்பம்
குழப்பத்தில் இருப்பவன்
எப்போதும் ஜெயித்ததில்லை...


இழந்ததை மறந்து விடு
இருப்பதை இழக்காமல் இருக்க


சில இழப்புக்கள் வலியை தருகின்றது
சில இழப்புக்கள் வலிமையை தருகின்றது


புரியாத கவிதையும்
கலையாத கனவும்
அழகு தான்...


தோலில் சுருக்கங்கள் விழுந்தாலும்
உள்ளங்கள் சுருங்காமல்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
வாழும் நம் அம்மா அப்பாவின் வாழ்க்கையில்
ஓர் அழகிய காதல்
வாழ்ந்துக்கொண்டிருக்கு...


அவமானத்தின் வலி
அழகிய வாழ்க்கைக்கான வழி...


விளையாட்டாக
எடுத்துக்கொள்ளும்
விசயங்களில் தான்
அதிக. தோல்விகளை
சந்திக்கின்றோம்...


ஒளியை கண்டால்
ஓடிவரும் நிழல்
இருளிலும் உடனிருக்கும் நிஜம்...


மனம் அழகானால்
வாழ்க்கையும் பூவனமாகும்...


வெற்றி தோல்வி அறியாமலேயே முடிந்துவிடும் விளையாட்டு வாழ்க்கை...


தோல்வி உன்னை
வீழ்த்தும் போதெல்லாம்
குழந்தையாகவே விழு
மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க...


நம்பிக்கையா இருங்க
ஆனால் ஒருவருக்கு தெரியாமல்
இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதிங்க...


கல்லூரியிலும் கற்றுக்கொள்ள முடியாத
வாழ்க்கை பாடத்தை
சில இழப்புகள் கற்றுத்தருது...


கவலைகள் எல்லாம்
கனவைப்போல்
கலைந்துப்போக
வேண்டுமென்பதே
அனைவரின் கனவு


நம் தேடல்களில் ....
பல தேவையற்றவையே


கோபப்படவும் யோசித்ததில்லை
கோபம் தனிந்த பின்பு தானாக பேசவும்
தயங்கியதும் இல்லை
அன்னையின் அன்பில் மட்டும்...


காரணமில்லாமல் வரும்
கோபங்கள் நம் வளர்ச்சியை
தடுப்பதோடு மட்டும் இல்லாமல்
நெஞ்சத்தில் வஞ்சகங்களையும்
அதிகரிக்க செய்துவிடும்...


நேர்மை தவறாமல் வாழ்பவர்களை விட...
நேரத்திற்கு தகுந்தாற்போல்
வாழ்பவர்களே நிம்மதியாய்
வாழ்கிறார்கள்...


நீ சுயமாகவும் சுதந்திரமாகவும் சிந்தித்ததை
எல்லோரும் விரும்புகிறார்களா இல்லை
வெறுக்கிறார்களா என நினைத்து
ஒரு போதும் ஒரு போதும் கவலைப்பட தேவையில்லை...


காயங்கள் ஆற மாற
உன் மனமாற்றத்தால் மட்டுமே முடியும்...


உன்னை விட்டு விலக நினைப்பவர்களுக்கு பாரமாய் இருப்பதை விட...
அவர்களை பாராமல் இருந்து பார்...
உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும்...!


உன் தேடல்களும்
எதிர்பார்ப்புகளும்
நியாயமானதாக இருந்தால்
நிச்சயம் உன்னை வந்தடையும் வந்தடைந்திருக்கும்...


வாழ்க்கை பாடத்தை
கற்றுக்கொள்ள...
அம்மா அப்பா கடந்து
வந்த பாதையை அறிந்து
கொண்டாலே போதும்...


தவறுகள் மட்டும் தண்டனைக்குரிய குற்றம் அல்ல
நேசிக்கும் மனதை அலட்சியம் செய்வதும்
அலைக்கழிப்பதும் கூட
தண்டனைக்குரிய குற்றம் தான்...


ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட...
அதிக புரிதல் இருப்பதே சிறந்தது...


எதையும்
ஏற்றுக்கொள்ளும் போது
மனம் இலகுவாகிறது


உடைந்த கண்ணாடி போல்
ஒட்டவைக்க முடிந்தும்
முடியாமல் போகிறது சில உறவுகளை...


அனைத்துக்கும் காரணம்
தேடிக்கொண்டிருந்தால்
வாழ்க்கையை ரசிக்க
முடியாது


அதிக உரிமை
எடுக்காதே
கொடுக்காதே
ஒருநாள்
வெறுப்பாய் வெறுக்கபடுவாய்...


நம் கண்ணீரை நம் கையே
துடைத்துக்கொள்ளும்போது
மனம் தெளிவான முடிவுக்கு
வந்துவிடுகின்றது....


நான்
ரசித்த
முதல் இசை
தந்தையின்
இதயத்துடிப்பு...


உழைப்பிருந்தால் தான்
வீட்டிலும் உனக்கு மதிப்பிருக்கும்...


பிடித்தவர்களின்
நிராகரிப்பும் அலட்சியமும்
வலியை கொடுத்தாலும்
அழகிய வாழ்க்கைக்கான
வழியையும் காட்டுகிறது....


இன்பமோ துன்பமோ
அனுபவிக்கபோவது நீ ..எனவே
முடிவும் உனதாகட்டும்


பாசம் இருக்குமிடத்தில்
அதிகாரம் இருப்பதில்லை
அதிகாரமிருக்கும் இடத்தில்
அன்பு நிலைப்பதில்லை...


நீர்க்குமிழியை போல்
வாழ்க்கை......
மறைவதற்குள்
ரசித்திடுவோம்


இன்று மனதிற்கு
வலிகொடுத்த நிகழ்வுகளை
எல்லாம் இருளோடு கரைத்திடுவோம்...


ஜெயிக்கும் வரையில்
தன்னம்பிக்கை அவசியம்,
ஜெயித்த பிறகு
தன்னடக்கம் அவசியம்.!


தன்னை நியாயப்படுத்தி
கிடைக்கின்ற எதற்கும்
ஆயுள் குறைவு தான்...
புரியாத பிரியங்கள் பிரிவுகளால்
முடிவை தரும்🙋🙋🙋


மனதில் உள்ள
சுமைகளை யாரிடமாவது
கூறி அம்மா ஆறுதல்
தேடிக்கொள்வார்....
ஆனால் அப்பா அத்தனை
சுமைகளையும் மனதிலேயே
சுமந்துக்கொண்டு எந்த சுமையும்
இல்லாததைபோல் காட்டிக்கொள்வார்


தொடும் தூரத்தில்
வாழ்க்கையிருக்க...
தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றோம்
வாழ்க்கையை தேடி...


வாழ்க்கையில்
வலிகளை அனுபவித்தவர்கள்
காட்டும் வழிகள்
சிறந்ததாகவே இருக்கும்...


நம்முடைய மனமும் உள்ளமும்
தெளிவாக இருக்குமானால்
நம்மை யாராலும்
வீழ்த்த முடியாது...


வாழ்க்கை என்பது
மிகப்பெரிய
எதிர்பார்ப்புகளில் இல்லை
சின்னச் சின்ன
சந்தோசங்களில்
தான் வாழ்க்கை உள்ளது
என்றும் அன்புடன்...


வாழ்க்கையில் எது கிடைக்காமல்
போனாலும் பரவாயில்லை...
நம் மீது அன்பும் அக்கறையும் கொண்ட
சில உறவுகள் மட்டும் கிடைத்தால்
போதும்...


வாழ்க்கைல எல்லாமே ஈஸியா கிடைச்சா சுவாரஸ்யம் இருக்காது
போராடி கிடைக்குற வெற்றிக்கு எப்பவுமே மதிப்பும், ருசியும் அதிகம்


வாழ்க்கையில நம்பிக்கை பலமாக இருக்கட்டும்
அதுவே முன்னேறத்திற்கு
பாலமாக அமையும்...


முடிவுகளை தயங்காமல்
எடுக்கும் திறன்
நம்மிடம் இருந்தால்
முன்னேற்றத்திற்கான வாயிற்கதவுகள்
எப்போதும் திறந்தே இருக்கும்


பேசிக்கொண்டே இருக்காதிர்கள்
வெகுசீக்கரமே வெறுக்கப்படுகிறார்கள்
மெளனமாக காத்திருங்கள்
அதிகமாக தேடப்படுகிறார்கள்...


உதிக்கும் போதும்
மறையும் போதும்
ரசிக்கும் உலகம்
உச்சிக்கு வந்தால்
திட்டி தீர்க்கும் சூரியனை மட்டுமல்ல
மனிதனின் வளர்ச்சியும் கூட


ஏதோ ஒன்றுக்காக
காலம் நம்மை
காக்க வைத்துக்
கொண்டு தான் இருக்கிறது....


கோபம் எனும்
இருட்டில் விழுந்து⚡
விடாதே
பிறகு பாசம்
எனும் பகல்
கண்ணுக்கு 💥
தெரியாது...


வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்
வரலாறுன்டு வேடிக்கை பார்த்தவனுக்கும்
விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி கூட கிடையாது
வாழ்க்கை புத்தகத்தில்...


உன் எல்லை எதுவென்று
உன் மனதுக்கு தெரியும் போது
அடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய
கவலை உனக்கெதெற்கு...


நேற்றைய நினைவுகள்
பயனற்றது....
நாளைய நிகழ்வுகள்
கேள்விக்குறியே....
இன்று மட்டுமே
நிஜம்...
ரசித்து கடப்போம்
ஒவ்வொரு நொடியும்...


ஒரு சிறந்த புத்தகம்,
ஒரு நல்ல நண்பனுக்கு
சமம்...
புத்தகங்களை திறந்து வைப்பின்...
ஜன்னலை போன்றே,
நல்ல காற்றாக,
கருத்துக்களும் வந்தடையும்
நம்மை மகிழ்விக்க...
(வாசித்தல் - அவசியமாக)


சிரிப்பை இயல்பாக்கி
கொள்ளுங்கள்...
மனதில் கவலை
இருப்பினும்,
அகம் போல,
முகமும்
"அழகு"
பெறும்...
(தனித்தன்மையாக)


தடுக்கி விழும்போது
தூக்கிவிட யாரும்
வரவில்லை என்றாலும்,
நிமிர்ந்து சீராக நடக்கும்போது
தடுக்கிவிட யாராவது
ஒருவராவது வருவார்கள்...
(கவனம்)


பேச்சில் சுதந்திரம் வேண்டாம்
தேவையானவற்றை பேசி
தேவயற்றவையை வீசி செல்
பேச்சில் கட்டுப்பாடுத்தான்
வேண்டும்


எழுதி விடு...
தலையெழுத்தையும்
சேர்த்து...
உன் விருப்பப்படியே...
உன் வாழ்க்கை
உன் கையில்


நல்லதொரு
மாற்றங்கள்
நம்மிடையே
தவறுகளை
திருத்தி கொள்ள
ஒரு வாய்ப்பாக
(தெளிவு)


சந்தோஷம் என்பது
அமைவதில்லை
நாம் தான் அமைத்து
கொள்ள வேண்டும்...


உன் வாழ்க்கையை நீ
உண்மையாக நேசி...


நிகழ்காலத்தை
சரியாக பயன்படுத்தி
கொண்டால்
எதிர்காலம்
நம்மை வரவேற்கும்...!


தனியாக இருக்கும்போது
சிந்தனையிலும்
கூட்டத்தோடு இருக்கும்போது
வார்த்தையிலும்
கவனமாக இருக்க வேண்டும்


நேற்றைய நினைவுகளை
நினைத்துஎண்ணி...!
நாளைய கனவுகளில்
மூழ்கி...!
வாழும் வாழ்வின்
ஒவ்வொரு நொடி
சந்தோஷத்தையும் இழக்காதே...!


கடின உழைப்பும்
எவ்வித முயற்சியுமின்றி
எளிதாக எல்லாம்
கிடைக்க வேண்டும்
என நினைப்பவர்கள்
ஒரு போதும் வாழ்வில்
வெற்றி பெற இயலாது


வாழ்க்கை
ஒரு விசித்திரமான பரீட்சை
அடுத்தவரை பார்த்து
காப்பி அடிப்பதால்
தான் பலர்
தோல்வி அடைகிறார்கள்
காரணம் ஒவ்வொருவருக்கும்
தனித்தனி கேள்வித் தாள்கள்


எதிர் பார்ப்பதை விட
எதிர் கொள்வதைக்
கற்றுக் கொள்ளுங்கள்
இங்கு எதிர்பார்க்கும்
வாழ்க்கை
கிடைப்பது இல்லை
எதிர் கொள்ளும்
வாழ்க்கையே கிடைக்கிறது


பிடித்ததோ
பிடிக்கலையோ
வேண்டுமோ
வேண்டாமோ
சகித்துக் கொண்டு
நாட்களைக்
கடத்த சொல்லித்
தருகிறது வாழ்க்கை


ஆயிரம் உறவுகள்
துணையாக இருந்தாலும்
வாழ்வை தனியாகத்
தான் எதிர்க்கொள்ள வேண்டும்
அவரவர் பாதை
அவரவர் பயணம்
அவரவர் மனம்
அவரவர் வாழ்க்கை


இஷ்டபட்(டு)ட
வாழ்க்கையை
அமைத்து கொண்டால்
கஷ்டங்களை வெளியில்
சொல்ல கூடாது


தூய்மையான எண்ணங்கள்
துணிச்சலான செயல்கள்
இவ்விரண்டும் எப்போதும்
இருப்பின் வாழ்க்கை சிறக்கும்


வாழ்க்கையில் எப்போதுமே
சந்தோஷமாக இருப்பது
ஒரு கலை
ஆனால் அதை
யாரிடமும்
கற்றுக் கொள்ள முடியாது


ஏமாற்றம்
வலியை தந்தாலும்
நல்வழியையும் காட்டும்
வாழ்க்கைக்கு


அழகிய காட்சியை
தேடாதீர்கள்
காணும் காட்சியை
அழகாக்குங்கள்
வாழ்க்கை அழகாகும்


வாழ்க்கையில்
பல வலிகள் உண்டு
அதே சமயம்
பல வழிகளும் உண்டு
ஆதலால்
தைரியமாய் நகருந்து
கொண்டே இரு


இவ்வுலகில்
நம்மை அடுத்தவர்கள்
உடன் ஒப்பிட
வேண்டாம்
நாம் விலை
மதிக்க முடியாதவர்கள்
என்ற எண்ணத்தோடு
அடி எடுத்து வைத்தால்
வாழ்க்கை சந்தோஷமாக கழியும்


வாழ்க்கை என்பது
எதிர்காலத்துக்கான
போராட்டம் அல்ல
வாழும் தருணங்களை
உயிர்ப்புடன் வைத்துக் கொள்வது
கடந்தகாலத்தை நினைத்து
வருந்துவதை விட
எதிர்காலத்தை எதிர்கொள்வது
சாலச்சிறந்தது


நமக்கு
பிறர் தரும் வலிகள்
புதிய அனுபவங்களை
கொடுத்தாலும் அவரால்
நாம் அனுபவித்த வலிகள்
வடுக்களாக எப்போதும்
நீங்காமல் நினைவு படுத்திக்
கொண்டே இருக்கும்
வலிகள் இல்லாமல்
வாழ்க்கை இல்லை
வலிகளை தாங்காமல்
வாழ்க்கையே இல்லை


வாழ்க்கை ஈசி
நம் பலவீனத்தை
உணர்ந்து கொண்டால்
வாழ்வது


வாழ்க்கையில்
அதிகம் பேசாதீர்கள்
இல்லையெனில்
வேண்டியவருக்கு கூட
வேண்டாதவர்கள் ஆகிவிடுவீர்கள்


யாரை போலவும் இல்லாமல்
இது தான் நான் என்று
தன் இயல்பு மாறாமல்
வாழ்வதும் ஒரு வகையில்
வாழ்நாள் சாதனை தான்


பல கடினமான
சூழ்நிலைகளுக்குப் பிறகு
ஈட்டிய வெற்றியை
நினைத்து பார்ப்பதை விட
கடந்து வந்த
கடினமான பாதைகளை
நினைவில் வைத்து செயல்படு
சுலபமாக வாழ்க்கையை
எதிர் கொள்வாய்


நீங்கள்
தவறவிட்ட வாழ்வு
உங்களுக்கானது இல்லை
என்பதை
உறுதி செய்து கொள்ளுங்கள்
உங்களுக்கான வாழ்வு
என்பது
நீங்கள் வாழ்ந்து
கொண்டிருப்பது மட்டுமே


வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்
வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்
அர்த்தங்கள் ஆயிரம் உண்டு
வலிகளை சுமந்து
வழியைத் தேடும் பயணம்
தான் வாழ்க்கை


வலி
வேதனை
ஏமாற்றம் எல்லாம்
வாழ்க்கையின் இறுதிக்கட்டமல்ல
வாழ்க்கையை புரிந்துக் கொண்டு
பயணிப்தற்கான முயற்சி கட்டம்


புயலுக்கும்
பூகம்பத்துக்கும்
இடையிலான புரியாத
போராட்ட பயணம்
தான் வாழ்க்கை
ஆரம்பத்திலே
புரிய வேண்டுமென நினைத்தால்
சுவாரஸ்யம் இருக்காது


சிலர் உங்களை
மட்டம் தட்டுவார்
நீங்கள் உயர்ந்தபின்
அவர்களே கையும் தட்டுவார்
நீங்கள் உங்கள் பாதையில்
போய்க்கொண்டேயிருங்கள்
விமர்சிப்போரை விட்டுவிடுங்கள்
ஏனெனில் அவர்களுக்குப் பாதை
என்பதே கிடையாது


நம்மிடம்
பேசுகின்ற அனைவரும்
உண்மையாக
தான் பேசுகின்றார்களா
என்று யோசிக்க ஆரம்பித்தால்
வாழ்க்கை நிம்மதி
இல்லாமல் போய்விடும்


வலி
இல்லாத வாழ்க்கையும்
இல்லை.
வழி
இல்லாத வாழ்கையும்
இல்லை
வலிகளை கடந்து
வழிகள் தேடுவோம்


வாழ்க்கையில்
எத்தனை கஷ்டங்கள்
வந்தாலும் உங்களுக்கான
நிமிடங்களை
ரசிக்க மறக்காதீர்கள்


வாழ்க்கையில்
பிடித்தது எல்லாமே
கிடைப்பதும் இல்லை
கிடைத்த எல்லாவற்றையும்
பிடித்தது போல்
மாற்றவும் முடிவதில்லை
ஆனாலும் வாழ்கிறோம்
ஆயுள் முடியும் வரை
வாழவேண்டும் என்பதற்காக


நமக்கு நாம்தான் துணை
என்பதை ஒரு கட்டத்தில்
உணர்த்தி விடுகிறது
இந்த வாழ்க்கை


எண்ணம் உறுதியாக இருந்தால்
எண்ணியபடி உயரலாம்
நமது எண்ணம் தான் நம்முடைய
எதிர்காலத்தை உருவாக்கிறது
(எண்ணம் போல வாழ்வு)


மன்னிக்க தெரிந்தவர்களுக்கு
வாழ்க்கை எப்போதும்
அழகாக தான் தெரியும்


இயல்பான நம்மை அறிவோம்
வேஷங்களை களைவோம்
சாதனையாளர்களாக மலர்வோம்
(வாழ்வினிது)


அடுத்தவர்
திரும்பி பார்க்கும்
அளவிற்கு
இருக்க வேண்டுமே
தவிர
திருத்தி பார்க்கும்
அளவிற்கு
இருத்தல் கூடாது
நம் வாழ்க்கை


வாழ்க்கையில் அன்பை
தருபவர்களை காட்டிலும்
அனுபவத்தை
தருபவர்கள் தான் அதிகம்


இறுதி பக்கம் இதுதான்
என்று கூற முடியாத
கதை புத்தகம் தான்
நம் வாழ்க்கை


நம்ம வாழ்க்கைல
ஒரு நாள் எல்லாம் மாறும்
ஆனா எதுவும்
ஒரே நாளில் மாறிடாது
புதிய பாதையை நோக்கி
பயணிப்போம்


What's next (அடுத்து என்ன)?

என்பதில் வாழ்க்கை
நகர்ந்து கொண்டிருக்கிறது


நிஜம் தான்
வாழ்க்கைக்கு அழகு
அந்த நிஜத்தை
விரும்புவது தான்
நம் ஒவ்வொருவருக்கும் அழகு


அறிவாளினு காட்டி
அவஸ்தபடுறதவிட
முட்டாளுங்கிற பட்டத்தோடு
லைப்ப ஜாலியா
கடந்திடணும்



  அன்னையர் தினா நல்வாழ்த்துக்கள் 🎉 Mother's day Quotes in Tamil - Let's Make the Unforgettable Year for our Mom by Dedicating the  ...